
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.
English Meaning:
Chant Na Ma Si VaThe lovely Sakti into my heart entered;
There She sat rejoicing;
Chant Na Ma Si Va,
Think of what it brings;
Cling to Her Feet;
Transformed was I;
All my prattle ceased.
Tamil Meaning:
மேற்கூறியவாறு யான் அந்நான்கு எழுத்தையே ஓதினமையால் சிவசத்தி என்னிடத்து வந்து பொருந்தி, எனது உள்ளத்தை இடமாகக் கொள்ள விரும்பி, அங்ஙனம் அதன்கண்ணே அமர்ந்தாள். அதனால், யான் எனது சீவநிலையினின்று நீங்கினேன். பிறமந்திரங்களைப் பல்வேறு பயன் குறித்துப் பிதற்றுதலையும் ஒழித்தேன். ஆகவே, நீவிரும் `நமசிவ` என்று ஓதுதலின் பயனை ஆய்ந்து உணர்மின்; உணர்ந்து அம்மந்திரத்தைப் பற்றுமின்.Special Remark:
`அந்நான்கெழுத்தையே ஓதினால்` என்பது இயைபு பற்றிக் கொள்ளக் கிடந்தது. ``நமசிவ என்னும்`` என்பது தொடங்கி மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage