
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.
English Meaning:
Letter SixDraw eight lines vertical,
And eight lines horizontal,
In central chamber thus formed,
Place Lord`s Letter-Six—Om Na Ma Si Va Ya,
In forty and eight squares that remains,
The Sacred Letters distribute,
And there pray.
Tamil Meaning:
செங்குத்தாக எட்டு நேர்க்கோடு கிழித்து, அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை இழுக்க நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இருக்கச்செய்ய வேண்டும்; அஃதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம்.Special Remark:
``கீறியிட்ட`` என்பது ஒருசொல். கீறியிட்ட நடுவு - கீறிய தனால் உண்டான நடு அறை. `ஒன்றியபின்` என்பது, ``ஒன்றில்`` எனத் திரிந்து நின்றது. வட்டம் - சக்கரம். `நாற்பத்தெட்டிலும் எழுத்தை இட்டு` எனச் செயப் படுபொருள் வருவித்துக் கொள்க. `சிட்ட` என்பதில் அகரம் தொகுத்த லாயிற்று. சிட்டம் - மேன்மை. எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பொறித்தற்கு உரிய எழுத்துக்கள் வருகின்ற மந்திரத்திற் கூறப்படும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage