
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
English Meaning:
All Gods Are But The One SivaIt is only by the grace of Siva decked with konrai flowers,
That the celestials and the humans who are in essence the same exist.
There is no God except He,
Our only duty is to enshrine Him in our heart.
Tamil Meaning:
உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை.Special Remark:
`அதனால், ஏனைத் தேவரும், தலைமக்களும் மாலயன் போலச் சிவபெருமானது கலப்பினை நோக்கும்வழி அவனாதலும், இவர்தந் தன்மையை நோக்கும்வழி இவரோயாதலும் பெறப்படும், என, வானுலகத்தில் இந்திரன் முதலாகவும், மண் ணுலகத்தில் அரசர் முதலாகவும் உள்ள தலைவரது நிலைமையை விளக்கியவாறு. இவ்வாற்றானே. ``திருமாலுக் கடிமைசெய், தெய்வம் இகழேல், சக்கர நெறிநில் (ஆத்திச்சூடி) என்றற்றொடக்கத்து அறநூற் கட்டளைகள் எழுந்தன என்க. ``ஓரும்`` என்றது செயப்பாட்டு வினையாய் நின்றது. தனிமை, இங்குச் சுதந்திரத்தைக் குறித்தது. மற்று, அசைநிலை,Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage