
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.
English Meaning:
Created UniverseAll the fragrant seven worlds are His,
But He chooses to remain in the cremation ground,
If we do sincere penance,
He is sure to abide in our hearts.
Tamil Meaning:
சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.Special Remark:
`ஆதலின், அவன் அருளைப் பெறுதற்கு அத்தவமே செயற்பாலது` என அதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. `இப்பதி` என்பதனை `இது பதி` என்றார். `பதி` நான்கில் முன்னவை இரண்டும் உலகம். இறுதியில் உள்ளது உறைவிடம். விது - சந்திரன். பதி செய் தவன் - பதித்தலைச் (சூடுதலை) செய்தவன். ``ஏலங் கமழ்`` என்றது சொல்லளவாய் நின்ற பொழிலுக்கு அடை. எல்லாவற்றையும் நினைத்த அளவாலே செய்தலின், செயலைக் கூறாது அறிவையே கூறி னார். `சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவமே மெய்த்தவம்` என்ப தனை விளக்கவே, `தவம்` என்றொழியாது; `மெய்த்தவம்` என்றார். `சிவபுண்ணியம்` அல்லது `பதிபுண்ணியம்` எனப்படுவதும் இதுவே என்க. எனவே, இதனால், `அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை` என்பதனை விளக்கியவாறாயிற்று. `சிவனை நோக்கிச் செய்யும் தவமே மெய்த் தவமாதற்குக் காரணம் உண்மைக் கடவுள் அவனாதலே` என்பதனை விளக்கவே, பொழில் ஏழும் முதுபதியும் செய்தவனா தலை எடுத்தோதினார். முதுமை, இங்குப் பெருமைமேல் நின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage