ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே. 

English Meaning:
Axle-Pin

Lord shiva is dear to all the devotees even though they are unable to see him
I won't feel shy to embrace you with my body and soul
In the minds of the devotees who have true love for him
He is riveted to their heart like a axle-pin
Tamil Meaning:
காண முடியாத அடியார்களுக்கும் உறவாக உள்ள சிவபெருமானை சிறிதளவும் நாணம் இல்லாமல் நான் தழுவி கொள்வேன். சிறிதும் கோணல் இல்லாத குணம் உடைய அடியார் மனதில் ஆணி போல் ஆழ்ந்து நிற்கிறார் இறைவன்.
Special Remark:
`அதனால் அவ்வாற்றால் அவனை மனத்தில் எழுந் தருளப் பண்ணிக்கொண்மின்கள்` என்பதாம். இரண்டாம் அடியை முதற்கண் மொழிமாற்றி வைத்து, ``உளர்`` என்றதன்பின், `என்று` என்பது வருவித்து உரைக்க. இது காறும் நினைதல் கூறியவாறு; இதன் பின் வாழ்த்துதலைக் கூறுதலே முறையாயினும், அஃது இந்நூற்குச் சிறந்ததாதல் பற்றி இறுதிக்கண் கூறுவாராய், வணங்குதலை முன்னர் கூறுகின்றார்.