
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.
English Meaning:
Praise And Be BlessedHeavenly Father, Nandi, the unsurfeiting nectar sweet,
Bounteous One, Unequalled, First of Time!
Praise Him ever; and even as you praise,
So thine reward will also be.
Tamil Meaning:
எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.Special Remark:
`பொது நீக்கி ஒப்புயர்வற்ற தலைவனாக உணருந்தன்மை இல்லாது பொதுப்பட ஏத்தினும் அது பின்னர் உண்மையுணர்வைப் பயக்கும்` என்பதும், பயன்கருதித் துதிப்பினும் அது பின்னர்ப் பயன் கருதாது துதிக்கும் மெய்யன்பினைப் பயக்கும் என்பதும் கருத்து.``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9)
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசரும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage