ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 

English Meaning:
Transcends All
He who surpassed Brahma seated on the lotus,
He who transcended Vishnu, the ocean-hued illusionist,
He who outshone Isan, who transcends all,
He who encompasses the infinite and is present everywhere.
Tamil Meaning:
பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்தில் நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.
Special Remark:
ஆதி - முதல்வன். இறுதியில், ``கடந்து நின்றான்`` என்றதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இதனால் மேலதனை வலியுறுத்தி, எங்கும் நிறைந்து நிற்றலும் கூறப்பட்டது.