
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
English Meaning:
Siva Is NonpareilAmong the gods, none can equal Shiva; among the people, none can compare with him; therefore, naturally transcending the world, the first God, Shiva, shines as the radiant sun of knowledge (Jnana Surya).
Tamil Meaning:
தேவர்களில் சிவனுக்கு நிகராக இருப்பவர் யாரும் இல்லை; மக்களிடத்தில் அவனுடன் ஒப்பிடக் கூடியவரும் இல்லை; எனவே, இயல்பாகவே உலகத்தைத் தாண்டி, ஞான சூரியனாய் மிண்கு முதன்மையான கடவுள் சிவபெருமானே.Special Remark:
``இங்கு`` என்றது ``இம் மண்ணுலகில்`` என்றபடி. `சித்தியாலும், முத்தியாலும் சிலர் சிவனோடு ஒத்திருப்பர்` என மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு, ``அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` என்றார். ``ஆதலின்`` என்பது சொல்லெச்சம். ``அன்று கடந்து`` என மாற்றுக. ``அன்று`` என்றது ``அநாதி`` என்னும் பொருளது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பொன் - பகலவன். ``பொன்னொளியாய்`` என உருவகப் பொருண்மைத்தாய ஆக்கம் விரிக்க. தவன் - தவத்தின் பயனாய் உள்ளவன்; பரமுத்திப் பேறாய் உள்ளவன்; ``முதற்கடவுள்`` என்றவாறு. தா மரையான் - தாவுகின்ற மானை ஏந்தியவன். ``சடைமுடித் தா மரையான்`` என்றது, `சிவபெருமான்` என்னும் பெயரளவாய் நின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage