
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
English Meaning:
Chant His Names ThousandLike the fragrance of the musk the musk-deer constant emits,
Is the True Path which the Lord to Celestials imparts.
Sitting or moving, I chant the rich essence of His Name,
His thousand Names that are like spark divine.
Tamil Meaning:
சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.Special Remark:
`நீவிரும் அவ்வாறு செய்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். `மான்மத மணம் சந்தன மணத்தினும் வேறாய் மிக்குத் தோன்றுமாறுபோலச் சிவபிரான் அறிவுறுத்திய நெறி ஏனை நெறி யினும் மிக்குத் தோன்றுதல் அறிவுடையார்க்குப் புலனாகும்` என்பது, `சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்` என்ற உவமையால் குறிக்கப் பட்டது. ``மாயங்கத் தூரியது மிகும் அவ்வழி`` என மேலேயும் கூறினார். (தி.10 திருமந்திரம் - 51) கவரி, ஆகுபெயர்.`முத்தியுலகத்தில் மெய்ந்நெறி அறிவுறுக்கப்பட்டோர் பிரணவர் முதலியோர்` என்பது பின்னர்க் காணப்படும் `மெய்ந் நெறி யானே` என உருபு விரிக்க. ``ஆர்ந்தசுடர்`` பன்மையும், ஒளியும் பற்றி வந்த உவமை. `பேர்ந்தும்` என்பதும் பாடமாகலாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage