
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
English Meaning:
In The Heart Of The PureHumbled and meek, seek thou the Feet of the Lord,
Who equals the rays of purest gold serene;
Praise Him with songs of the humble heart
And unpenurious tongue;
Into such He enters, the all-fashioning Lord.
Tamil Meaning:
கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.Special Remark:
`குரைகழலை நாடும்; அது செம்பொன்னின் ஒளியொக்கும்` என்னும் தொடர்கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. `நாடும்` என்பது உம்மீற்றுப் பன்மை ஏவல். மறைஞ்சு, `மறைந்து` என்பதன் போலி. `மறைந்தடம்` எனவும் ஓதுவர். உள்ளத்தைச் சடம் என்றது, உடம்பையும் குறித்தற்கு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage