
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.
English Meaning:
Seeking Is AllI`ll adore Him I`ll keep Him in my heart;
I`ll sing His Name and dance with gift of flowers,
Singing and dancing seek the Lord;
This alone I know, only too well I know.
Tamil Meaning:
சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.Special Remark:
`நான் இன்று அறிவது இவ்வளவே` என்றது, `இதற்குமேல் உண்மை வேறில்லை` என்றதாம். `பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த - மக்கட் பேறல்ல பிற` (குறள் - 61)`யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை - எனைத்தொன்றும் - வாய்மையின் நல்ல பிற`(குறள் - 300) என்றவற்றிற்கும் கருத்து இவ்வாறாதல் அறிக.
நாற்பத்தாறு திருமந்திரங்களால் சிவபெருமானது முதன் மையை முதற்கண் கூறிய நாயனார், `சிவன் ஒருவனே கடவுளாயின் `அயன், அரி, அரன்` என மும் மூர்த்திகளாக யாண்டும் கூறப்படு வோரது நிலை என்னை?` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அம்மூவரது மேல் கீழ் நிலையைப் பத்துத் திருமந்திரங்களால் விளக்குகின்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage