
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.
English Meaning:
Throbs WithinDaily I kneel and chant Nandi`s holy Name;
Envisioned, He stands, the Fire-hued One,
Flaming like the moon in sky; into me He comes,
And throbs and breathes through my mortal flesh.
Tamil Meaning:
சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.Special Remark:
உம்மைகள் எச்சம். ``தழல்தான்`` என்பதில்தான், அசைநிலை. `தழலொக்கு மேனியனாகிய தானும் மதிபோல் உடலுள் உவந்து நின்றான்` எனக் கூட்டுக. உவத்தல் - நிறைதல். ``ஊனில் நின்று`` என்பதனால், அவன் அதனோடு இயைபில்லாத தூயனாதல் பெறப்பட்டது. ``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) எனவும், ``எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய் யானிதற் கிலனொர்கைம் மாறே`` (தி.8 கோயில் திருப்பதிகம் 10) எனவும் போந்த அருட்டிருமொழிகளைக் காண்க. உயிர்ப்பாய் வெளிப்படுதலாவது, உயிர்க்குந்தோறும் புறத்தும், அகத்தும் இன்பமாய்த் தோன்றுதல்.``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` (தி.5 ப.21 பா.1)
என்றருளியதும் காண்க. இதனை அசபா மந்திரத்தின் அநுபவம் என்ப. ஏத்தினால் ஈசன் அருளைப் பெறுதலை அனுபவத்தின் வைத்து உணர்த்தியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage