
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
English Meaning:
Blossoms As AllHe is Brahma, He is Hara and is seated in every heart,
He blossoms as Divine Effulgence which knows no contraction
And he is the Order Eternal.
Tamil Meaning:
அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.Special Remark:
ஆதி - பிரமன். அரன் - உருத்திரன். வேதி - மாற்றம். ``உடலுள் நின்ற`` என்றதனால், அஃது இன்பதுன்ப நுகர்ச்சியைக் குறித்தது. எனவே, இது நிலைத்தொழிலை உணர்த்திற்று. முதல் இரண்டடிகளால் முத்தொழிற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது. இறுதி இரண்டடிகளால் அத்தொழில் புரிதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலால் கூறப்பட்டது. முன்னைத் திருமந்திரத்தில் பேரறிவு கூறப்பட்டாற்போல, இத் திருமந்திரத்தில் பேராற்றல் கூறப்பட்டவாறு காண்க. `எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிதலின், உயிர்கள் நன்மையடைதற்பொருட்டு நடுவு நிலையாளனாய் என்றும் நின்று ஆக்கல் அழித்தல் முதலியவற்றைச் செய்கின்றான்` என்றபடி. `விரிந்து ஆர்ந்திருந்தான்` என்றது, `அவனது பெருநிலையால் விளையும் பயன் இது` என்றற்கு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage