
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
English Meaning:
Eternal GraceTo them that speak of Hara`s Holy Feet and weep,
To them that daily muse at the Great One`s mighty feet
To them that, in deep devotion fixed, wait to serve,
To them comes the Eternal`s all-filling Grace.
Tamil Meaning:
சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.Special Remark:
`நாளும் பாவிப்ப` எனவும், `அடி உரன் செய்து` எனவும், ` அடி நிரன்` செய்து எனவும் மாற்றுக. உரன் - வலிமை; அது துணைவலிமேல் நின்றது. `நிறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. நிறன் - விளக்கம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage