
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.
English Meaning:
Divine PathExcept according to the Law, this sea-girt world survives not,
Except according to the Law, happiness does not follow,
Nothing can work against the Law,
If we adore Him, the light effulgent
He will guide us on the Path to liberation like the sun.
Tamil Meaning:
கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.Special Remark:
`ஆதலின் வினைவழியினின்று விடுதிபெற வேண்டு வோர் சிவபெருமானைத் துதிக்க` என்பது குறிப்பெச்சம். திருவள்ளுவ நாயனாரும், வினை நீங்குதற்கு வாயில் இறைவனது பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதலே எனக் கூறுமாறு அறிக.இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள். 5)
``இன்பம்`` என்றதன்பின்,`உளதாதல்` என்பது வருவித்து, உம்மையைப் பிரித்து அதனொடு கூட்டுக. ``இல்லை`` என்பது ``அல்லது`` என்றதனோடும் இயை யும்.
இதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. வினை உள தாவது அஞ்ஞானத்தால் ஆதலின் அது மெய்ஞ்ஞான வடிவினனாகிய சிவபெருமானால் நீங்கும் என்பார், ``சோதிப் பிரான்`` எனவும், ``பகலவன் ஆம்`` எனவும் கூறினார். ``சோதிப் பிரானும்`` என்ற உம்மை, அசைநிலை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage