ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 

English Meaning:
Lord Shiva dwells on the thousand-petal lotus, which has a color like the gradient pink that appears during the sunset.
For a person who wants the grace of the endless being lord Shiva,
shall worship lord nandi everyday
then they will find lord Shiva blooming with in their mind.
Tamil Meaning:
சந்தி எனப்படும் மாலை நேரத்தில் தோன்றுகின்ற இளஞ்சிவப்பு நிறத்தை உடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் வாழும் முடிவில்லாத ஈசனின் அருள் நமக்கே என்று எண்ணுபவர்கள், நந்தியை தினமும் வணங்கினால் அவர் உள்ளத்திலே சிவபெருமான் என்றும் நிலைத்து நிற்பார்.
Special Remark:
`அதனால் நீவிரும் வணங்குமின்` என்பது கருத்து. படுதல் - உடன்படுதல்.