
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.
English Meaning:
Illusions VanishHe who is birthless and long plaited hair, who has great compassion for all the beings
He who is deathless and who blesses every being with happiness
He who never abandons his devotees who worship him every day
He who gives you liberation through knowledge from this world of maya
Tamil Meaning:
பிறப்பில்லாத நீண்ட சடைகளையுடைய பேரருளாளனாகவும் இறப்பில்லாதவனாகவும் எல்லோருக்கும் இன்பத்தை அருளுபவனாகவும் சிவபெருமான் விளங்குகிறார். தன் அன்பர்களை விட்டு என்றும் நீங்காதவனாகிய சிவபெருமானை தினமும் தொழுதால் நாம் இந்த மாயையில் இருந்து விலகி அழியாத ஞானத்தை பெறலாம்.Special Remark:
`சிவபெருமான்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``தன்னை`` என்றது, `அவனை` என்றவாறு. இவ்வாறு `பிறப்பிலி` முதலியவற்றைப் பயனிலையாக்காது, பெயராக வைத்துரைத்தல் சிறவாமை அறிக. பிறப்பிலி முதலிய பலவும் அவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவனாதலைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. சடைமுடி யோகியாதலைக் குறித்தலின், அதுவும் வணக்கத்திற்கு உரிய வனாதலைக் குறித்தல் அறிக. மாயா விருத்தம் - மாயைக்கு மாறானது. மாயை - அஞ்ஞானம்; `அதற்கு மாறு` எனவே, `ஞானம்` என்பது போந்தது. இறைவனை மறக்கும் மறதி அஞ்ஞானத்தால் உளதாவதாம். அது நீங்கவே, மறவாமையாகிய மெய்ஞ்ஞானம் உளதாம் என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage