
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.
English Meaning:
In Depths Of Devotee`s HeartTo them He comes, who, in heart`s deep confines Treasure His Name,
The Lord who consumed the deadly poison of hatred born,
He the Consort of Her of the gleaming brow,
He comes like a deer to its fold.
\\\\\\\\
Tamil Meaning:
சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.Special Remark:
`நெஞ்சிடை வைத்து` என ஒருசொல் வருவிக்க. பார்வை விலங்கினை குருவடிவிற்கேயன்றி, உள்ளத்தில் நினைக்கப் படும் வடிவிற்கும் கூறினார் என்க. ``கனஞ் செய்த`` என்றதில் `செய்த` உவம உருபு. கனம் - மேகம். `வாள் நுதல்` என்பது பாடம் அன்று.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage