
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.
English Meaning:
Bliss DeniedThey who enshrine Him in themselves equal great sages,
Contemplating Him in their hearts, they will love and adore Him,
Those who do not think Him do not get happiness,
Even as the kite sitting on a palm tree does not enjoy the palm fruit.
Tamil Meaning:
சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.Special Remark:
பின்னர் `நினையாதவர்` என வருதலால், முன்னர் `நினைப்பவர்` என்பதும், முன்னர் ``மனையுள் இருந்தவர்`` என்றதனால். பின்னர், `துறந்திருந்தவர்` என்பதும் பெறப்பட்டன. `ஞானம் ஈசன்பால் அன்பே` (தி.12 பெ. பு. ஞானசம்பந்தர். 843) ஆதலின், ஞானத்தை, ``நேசம்`` என்றார். `நின் இன்பம்` என்பது பாடம் அன்று. இதனால் நினைத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage