
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
English Meaning:
Shines In Love``Glory to the Holy Feet, `` the Devas chant,
``Glory to the Holy Feet, `` the Asuras hymn,
``Glory to the Holy Feet, `` the humans, too echo,
Thus I gloried Him, and in my love He shone.
Tamil Meaning:
தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.Special Remark:
`அதனால் நீவிரும் அதுவே செய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். இயக்கர், கந்திருவர் முதலியோரைத் தேவருள்ளும், நரகரை அசுரருள்ளும் அடக்கினார். நரகரும் தேவராதற்குச் சிவனது திரு வடியைத் துதிப்பர் என உணர்க. வேறு வேறு தொடராகக் கூறியது, போற்றுதலின் சிறப்பை விளக்குதற்கு. சிவன் அப்பெயரால் கூறப் படுதல், `நிறைமலம் அனாதியின் நீங்கி நிற்றல்`. (காஞ்சிப் புராணம். திருநெறிக்காரைக்காட்டுப் படலம். 23) பற்றியும் ஆதலின், `புனிதன்` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage