
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.
English Meaning:
MunificentSeeing the devout penance of the King of Alagai,
The Supreme Lord made him the lord,
Bestowed on him riches galore, and
Commanded him to abide there and reign.
Tamil Meaning:
அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.Special Remark:
`அதனால் பெருஞ்செல்வம் உடையவன்` எனப் புகழப்படுகின்ற குபேரனுக்கு அந்நிலையை வழங்கினவனும், `எங்கள் சிவபெருமானே` என்றவாறு. `அளகை வேந்தனை` `கொள் என்ற` என்பன பாடமல்ல. `அந்நிதிபதி` என்னும் சுட்டு வருவிக்க. `அது பதியை, இதுபதி; இதனை ஆதரித்து ஆக்கமதாக்கின் கொள் என்றான்` என முடிக்க. இதுகாறும் சிவபிரான் தேவர்க்குந் தேவனாதலைக் கூறி, `சிவனோடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை` என்பதனை விரித்துரைத்தவாறு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage