
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
English Meaning:
Attain Gracelord shiva stands continuously in all the beings and we should worship him everyday
he spreads himself throughout the crest of the earth
he dwells beyond the thousand petal lotus in our sahasthrathala (seventh chakra)
when the kundalini merges into the lotus a person would attain enlightenment such a person’s feet is holy.
Tamil Meaning:
இறைவன் எல்லா உயிர்களிலும் தொடர்ந்து நிற்பவன் அவனை தினமும் தொழ வேண்டும். இந்த உலகில் உள்ள எல்லா நிலப்பரப்புகளிலும் படர்ந்து நிற்பவன் சிவபெருமான் ஆவார். சிவபெருமான் மனித உடலில் உள்ள ஏழாவது சக்கரமாகிய சகஸ்தரத்தலம் என்று சொல்லக்கூடிய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மேல் நிற்க்கின்றார். அவ்வாறு நிற்க்கின்ற இறைவனை நம் உடலில் உள்ள குண்டலினி சக்தியானது சேரும் போது அந்த உடலானது மெய்ஞானத்தை அடைகிறது, அப்படிப்பட்டவரின் பாதம் பணிவது புண்ணியமானது.Special Remark:
பரி பாரகம் - எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலமாகிய இடம். ``பாரகம் முற்றும்`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்று இயையும். ``கமலமலர்`` என்றது அன்பரது உள்ளங்களை. `புணர்ந்து` என்றது உயிரெதுகை. `உடந்திருந்தான்` என்பது பாடம் ஆகாமை அறிக. `படர்ந்து நிற்றல், நடந்து நிற்றல், புணர்ந்திருத்தல்` என்னும் மூன்றும் முறையே இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் முறைமையை உணர்த்தியவாறு. `அம் முறைமையே சிவநெறி அத்துவிதம்` என்பதும், `அதனை உணர்தலே சிவஞானம்` என்பதும் அறிக. சிவனடிப் புண்ணியம் - சிவதன்மம்; சிவதன்மத்தால் விளைகின்ற சிவஞானத்தை, `சிவதன்மம்` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage