ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

English Meaning:
Baffling Quest Of Brahma And Vishnu

To illustrate that the vast extent of Lord Shiva's greatness is beyond measure, the story of Brahma and Vishnu who suffered in their attempts to find his head and feet serves as sufficient evidence."
Tamil Meaning:
சிவபெருமானின் பரந்த பெரிய நிலையை (வியாபகத்தை) ஒருவராலும் அளக்க முடியாது என்பதற்கு, அயன் (பிரமன்) மற்றும் மால் (விஷ்ணு) இருவரும் அவரது அடிமுடி தேடி காண முடியாமல் வலியுற்றார் என்ற வரலாறு போதுமான சான்றாகும்.
Special Remark:
`காண்பாராய இருவர்` எனவும், `கண்டிலராய்க் கூடி` எனவும் இயைத்துரைக்க. இருவருள் ஒவ்வொருவரும் அடி, முடி இரண்டையுங் காணுங் கருத்தினராய் முதற்கண்ணே தோல்வியுற் றமையின், ``அடி முடி காண்பார் அயன் மால் இருவர்`` எனப் பொதுப் படவே கூறினார். படி - தாம் கருதிய நிலை. நிலவுலகினின்றே புறப்பட் டமையின், ``மீண்டும் பார்மிசைக் கூடி`` என்றார். சிவபெருமானைப் பொதுநீக்கி உணர்தற்கு இவ்வரலாறு பெரிதும் சிறந்ததாய்ப் பயின்று வருவதாகலின், பின்னர்க் கூறப்படும் புராண வரலாறுகளுட் கூறுத லன்றி இவ்விடம் குறித்தருளினார். இவ்வாறன்றி, `இத் திருமந்திரமும் பின்னர் வரும் இவ் வரலாற்று மந்திரங்களுள் ஒன்றாகற் பாலதே` என்பாரும் உளர்.