
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
English Meaning:
Beyond Comprehension"Though Lord Shiva remains eternal and indestructible, and despite the Puranas declaring that countless gods have perished, many people on Earth and in the heavens do not dare to proclaim Him as 'The Supreme One.'"
Tamil Meaning:
சிவபெருமான் என்றும் அழியாமல் நிலைத்திருக்கின்றார். எண்ணற்ற தேவர்களெல்லாம் அழிந்துவிட்டனர் என்று புராணங்கள் சொல்வதையும் பொருத்து, மண்ணிலும் விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை "இவனே முதல்வன்" எனச் சொல்லத் துணியவில்லை.Special Remark:
`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ``காதல்`` என்றது அருளை. ஒருபெற்றியாய அருளை, `ஓர் அருள்` என்றார். நிற்றல் - அழிவின்றி நிலைத்திருத்தல். இதனால், அழிவில னாதல் கூறப்பட்டது. ஆகவே, `அவனை ஒழிய அமரரும் இல்லை` என்பது விளக்கப்பட்டதாம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage