
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.
English Meaning:
Siva is Contained in SaktiLord is the Light of the World
He is the consort of Sakti
He in me stands
That, my love`s greatness is;
He stands in Her too
As one Form inseparate;
With serpent and Ganga on matted locks
He in Her is contained.
Tamil Meaning:
பாம்பை அணிந்த விரிந்த சடையில் பெரிய கங்கை நீர் ஒரு புல்நுனியில் நீர்போல் அடங்கியிருக்கச் சிவன் சத்தியோடு இரு திறமும் ஒருவடிவிலே அமைய நிற்கின்றான். உலகில் பிறந்து அறிவு தொடங்க நின்ற நாள் முதலாக அவனது அழகிய அந்த மணக் கோலத்திலே அடங்கி நிற்பதே எனது அன்பின் பெருமையாகும்.Special Remark:
`அதனால், இன்பம் முதலிய எந்த உறுதிப்பொருளிலும் எனக்குக் குறை இல்லை; உலகீர், நீவிரும் அவ்வாறு அடங்கி நின்று அனைத்துப் பயனையும் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம். `மணாளன் பால்` எனத்தொகுக்கப்பட்ட உருபை விரித்துக்கொள்க. `கங்கை பாம்பணிந்த சடையில் ஒடுங்க` என்றது ஓர் இன்ப நயம். `பாம்பையும், கங்கையையும் அடக்கின ஆற்றலுடையவன்` என்பது உண்மைப் பொருள். விடம், ஆகுபெயர். `ஒடுங்கி` என்பது பாடம் அன்று.இதனால், சிவனைச் சத்தியோடு உடனாகக் கண்டு வழிபடுவார் எய்தாத பயன் இல்லை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage