
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.
English Meaning:
Nada Arises in Moon`s Sphere and Reaches the Heart CentreLike the rays of the Sun
The Nada from Moon Sphere arises,
From there it travels to the root of tonque,
And thence to throat the light goes,
And then to region of heart
Whence arises the articulate sound,
For all this,
The source is the Moon Sphere
(Where Sakti is.
Tamil Meaning:
பிறை வடிவாயுள்ள ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழுந்து நுணுகிச் செல்கின்ற நாதம், (வாக்கு) கீழே வந்து, நாவினால் பிராணவாயு அலைக்கப்படும் பொழுது பரு வடிவினதாய்ச் செவிக்குப் புலனாகிக் கேட்போருக்கும் பொருளை இனிது விளங்கச் செய்யும் முடிவு மொழியாம். ஆகவே, கண்டத் தானத்தில் உதான வாயுவால் உந்தப்பட்டுச் சொல்வோனுக்கு மட்டும் பொருள் விளங்க நிற்கின்ற இடைமொழியும், அங்ஙனம் உதான வாயுவாலும் உந்தப் படாமல் இதயத்தானத்தில் பொதுமையில் விளங்கியும் விளங்காதும் நிற்கும் முதல்மொழியும், ஆஞ்ஞை எல்லையினின்று மேலெழும், எனப்பட்ட, ஒடுக்கமாகிய அந்த நாதத்தின் விரிவேயாகும்.Special Remark:
முடிவுமொழி `வைகரி வாக்கு` என்றும், இடைமொழி மத்திமை வாக்கு என்றும், முதல் மொழி `பைசந்தி வாக்கு` என்றும் சொல்லப்படும். `நாதம்` எனப்படுகின்ற அதுவே இவ்வாறு `பைசந்தி, மத்திமை, வைகரி` என மூவகை நிலையாய் விரியும் என்பது இங்குக் கூறப்பட்ட பொருளாகும். இம்மூவகை வாக்குகளும் இங்ஙனம் தோன்றவும், ஒடுங்கவும் உள்ள சுத்த மாயையின் பகுதியே `நாதம்` எனப்படுவது என்பார், ``நாதம் நாக்கின்மதித்தெழும்`` எனவும், ``கண்டத்தின் உந்திய சோதியும், இதயத்தெழும் ஒலியும் இந்துவின் மேல் உற்ற ஈறு அதுவே`` எனவும், கூறினார்.பொருளை விளங்கச் செய்தல்பற்றி வாக்குகளை இரவிபோல் எழுவதாகவும் சோதியாகவும் கூறினார். இவை பற்றிப் பிறிது பொருள் தோன்றி மயக்காமைப் பொருட்டு, ``ஒலி`` என்று வெளிப்படக் கூறினார். ``இரவிபோல்வது`` எனவும் ``சோதி`` எனவும் கூறப் பட்டவை இனிது பொருள் விளங்க நிற்பனவும், ``ஒலி`` எனப்பட்டது அங்ஙனம் விளங்க நில்லாததும் ஆதல் தெரிந்துணரற்பாலது. `இரவிபோல் எழும்` என இயையும். ``பின்`` என்றது கீழிடத்தை. `பின்வந்து` என மாறுக. மதித்தல் - கடைதல்; அலைத்தல். ``மதித்து`` என்பதனை, `மதிக்க` எனத் திரிக்க. ``எழும்`` என்பது முற்று. மதித் தற்குச் செயப்படு பொருளும், உந்துதற்கு வினைமுதலும் வருவிக்கப் பட்டன. ``சோதி, ஒலி`` என்பன செவ்வெண். `ஈறாகிய அது` என்க. தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், மேற்கூறப்பட்ட இரு மாயைகளில் சுத்த மாயையின் சிறப்புக் காரியமாகிய சொல்லுலகம் ஆதார நிராதார யோகங்களில் காட்சிப் படுமாறு கூறப்பட்டது. இதனானே, `அவ் வுலகத் தொடக்கு அவ் யோகங்களால் முறையே ஒரளவிலும், பெரிய அளவிலும் மெலிவடையும்` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage