
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.
English Meaning:
Siva Arises in SaktiThe Lord of Spaces Vast
Abides in the loving heart of the Mother,
That bedecks honeyed-flowers in Her tresses;
He shares Her in His Form;
And He from Her arises
Himself thus a woman too!
Tamil Meaning:
கருவி கரணங்கள் சென்று பற்றும் வகையில் வெளி நில்லாதவனும், கரிய வண்டுகள் மொய்க்கின்ற மலர்களின் தேன் பொருந்தி நிரம்புதலால் நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிரால் மனம் வருந்துதல் இல்லாதவனும் ஆகிய சிவன், அத் தன்மையனாயினும், சிலபொழுது தனது கூறேயான ஒரு பெண்ணைத் தன் உடம்பில் ஒருபாதியில் கொண்டவனாய்க் காணப்படுதலும், சிலபொழுது பெண்ணேயாய்க் காணப்படுதலும் உடையன்.Special Remark:
``மா`` இரண்டில் முன்னது வண்டு, ``கள் அடை`` என்பதில் ``அடை`` என்னும் பகுதி `அடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `குழலாரால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மள் - மள்கல்; முதனிலைத் தொழிற் பெயர். `மழுங்குதல்` என்பது பொருள். `வெள்ளடையானாகிய மள்ளடையானாயினும்` என்பது சொல் அமைதி. ``ஆம்`` என்பதை, ``பாகன்`` என்பதனோடும் கூட்டுக. `பிறவியே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `சிவன் உண்மையில் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அதனால், வேடங்கட்டி ஆடுவார் போன்று பொது நிலையில் எவ்வகையாயும் தோன்றுவன்` என்பது ஈற்றடியின் கருத்து. எனவே, சிவனது ஆண் தோற்றம் ஒன்றையே கொண்டு `அதுவே அவனது உண்மையியல்பு` என வழக் கிடுதலும், பெண் தோற்றம் ஒன்றையே கொண்டு, `அதுவே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும், மாதொரு கூறாய தோற்றம் ஒன்றையே கொண்டு `இரண்டும் கூடியுள்ளதே அவனது உண்மை யியல்பு` என வழக்கிடுதலும் பேதைமைப் பாலவாதல் விளங்கும். இவ்வியல்பு சிவன், சத்தி இருவர்க்கும் உரியதென்க. எனவே, கடவுளது ஆண் தோற்றம் முதலிய மூவகைத் தோற்றங்களுள் எதனைக் காணினும், `இஃது உயிர்கள் பொருட்டு ஏற்ற பெற்றியாற் கொண்ட பொதுவியல்பாம்` என உணர்தலல்லது, `சிவன், சத்தி இவர்களது உண்மை யியல்பு என மயங்குதல் பொருந்தாதாயிற்று. இவ்வியல்பினை,``ஒன்றொடொன் றொவ்வா வேடம்ஒருவனே தரித்துக்
[கொண்டு
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்`` 1
என விளக்கிற்றுச் சிவஞான சித்தி. இன்னும்,
``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்`` 2
எனவும்,
``சிவம் சத்தி தன்னை யீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரி யாகும்; பால்மொழி கன்னி யாகும்;
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே`` 3
எனவும் வருவன போல்வன பலவும், இவையெல்லாம் கடவுள் தனது அருள் நாடகத்திற்கொள்ளும் பொதுவியல்பாதலன்றி உண்மை யியல்பாகாமையை விளக்க எழுந்தனவேயாம். ஆகவே,
``கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகு மாபோல்`` 4
என்ற பெரியவர் ஒருவர் வாக்கின்படி ஆடவர் போலவும், மகளிர் போலவும் வேடங்கட்டியாடுவார். அவ்வேடத்திற்கு ஏற்பவே நடித்து நிற்பினும் அவரது உண்மைத் தன்மை அவ்வேடத்திற்கு வேறாயினாற் போலவே, ஆணாயும், பெண்ணாயும் தோன்றும் கடவுளின் உண்மையியல்பு அவற்றின் வேறேயாம் என்பது இனிது விளங்கும்.
``சத்திதான் நாத மாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதான் ஆதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமும் ஆகும்`` 1
என்ற சிவஞான சித்தியையும் அதற்கு மாபாடியம் உடையார் உரைத்த உரையும் இங்கு இனிது நோக்கி உணர்க. இங்ஙனம், உணரமாட்டாது தம்முள் மாறுபட்டு வழக்கிடுவாரை நோக்கியேயன்றோ தாயுமான அடிகள்,
``அன்னே அனே எனும் சிலசமயம் நின்னையே;
ஐயா ஐயா என்னவே
அலறிடும் சிலசமயம்``
என முதற்கண் நகையாடியும், பின்னர்,
``என்னே எனேகருணை விளையாட் டிருந்தவாறு`` 2
என வியந்தும் கூறியருளினார். ஈற்றடி இனவெதுகை.
இதனால், `சிவம் சத்தி இவர்களிடையே சொல்லப்படும் நாயக நாயகித் தன்மை குணியும், குணமுமாய் நிற்கும். அதனை விளக்கும் அத்துணையதேயல்லது முழுவதுமாகின்ற உண்மையியல்பு அன்று` என்பதும், `அதனால் அத்தன்மைக்கு ஏற்ப அவர்கள் கொள்ளும் கோலம் அவர்களது பொதுவியல்பேயாம்` என்பதும் குறிப்பு மொழியாற் கூறப்பட்டன. இது பற்றியன்றே ஞானசம்பந்தரும், இறைவனை ``ஒருமை பெண்மை யுடையனாக`` 3 முன்னரே கண்டு வைத்திருந்தும், வையைக் கரையில் பாண்டியன் கேட்க அருளிச் செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்தில்
``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ`` 4
என அருளிச் செய்தார்! அதனால், இறைவனது உண்மையியல்பு உயிர் களால் `இன்னதுதான்` என வரையறுத்துணரப் படாததாதல் தெற்றென விளங்கும். இதனை விளக்கும் முகத்தானே ஆதார ஆதேயங்களாய் நிற்றல் சத்தி, சிவம் இருவர்க்கும் பொதுவேயாதல் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage