
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தக்க பராவித்தை தான்இரு பானேழில்
தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.
English Meaning:
Worship of Vidya ChakraMount Parasakti
In Vidya Chakra,
And for seven and twenty days,
Chant Rudra mantra again and again,
The Eight Saktis will there appear,
And the white hued Three-eyed Parasakti too.
With mace, and Her Mudra of yore.
Tamil Meaning:
ஷ்ரீசக்கரத்தில் சத்தியை வழிபட்டு, அவளுக்கு உரிய மந்திரங்களில் எந்த ஒரு மந்திரத்தையேனும் திரும்பத்திரும்பச் சொல்லி உருவேற்றினால், வெண்ணிறமும், மூன்று கண்களும், திரு மேனி அழகும், அபய வரத முத்திரைகளும் உடையவளாகிய ஞான சத்தியாகிய மனோன்மனியே ஏனை வாமாதி எண் சத்திகளாயும் மிகத்தோன்றி அருள்புரிவாள்.Special Remark:
சக்கரத்தையே ``வித்தை`` என்றார். இருபத்தேழு, ஒன்பது முக்கோணங்களிலும் உள்ள கீற்றுகள். இஃது ஆகுபெயராய் அவற்றாலாகிய சக்கரத்தை உணர்த்திற்று. காரணக் குறியாக மந்திரத் தினையே ``ருத்திரம்`` என்றார். ஷ்ரீசக்கர வழிபாட்டிற்குரிய ஷ்ரீவித் தியா மந்திரம், ``யாம் - ராம் - லாம் - வாம் - ஸாம் - த்ராம் - த்ரீம் - க்லீம், - ப்லூம் - ஸ: ஸர்வ ஜம்பநேப்யோ காமேஸ்வரீ காமேஸ்வர பாணேப்யோநம: பாண சக்தி பாதுகாம் பூஜயாமி`` என்பது.இனி, ``ஓர் ருத்திரம்`` என்பதற்கு `தேவிக்குரிய யாதேனும் ஒரு மந்திரத்தை` எனப் பொருள் உரைத்தலுமாம். தொக்கு - மெய்; உடம்பு. ஐ - அழகு.
இதனால், ஷ்ரீசக்கர வழிபாடாகிய ஷ்ரீவித்தை சத்தியின் எல்லா வழிபாட்டுப் பயனையும் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage