
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
றேய குழலி இனிதுநின் றாளே.
English Meaning:
She Dwells in AdharasTwo the Centres where the Primal Lord is,
One the Jewelled One
The other the Adharas six;
As the mind the Adharas six reaches
There She in each is with Her presence
Thus She, of the flowing tresses,
In sweetness stood.
Tamil Meaning:
சத்தி, சிவன் இருவருக்கும் உரிய இடம், உலக முதல்களுக்கு மேலாய், எட்டாய் அமைந்த இதழ்களையுடைய தாமரை மலராகும். அதுவன்றியும் தியான வகையால் வேறுபடுகின்ற ஆறு இடங்களும் உள. எல்லாவற்றிலும் சத்தி இனிது வீற்றிருக் கின்றாள்.Special Remark:
அண்டகம் - உலகம்; ஐ - முதல்; என்றது தத்து வங்களை. `தத்துவங்கள்` எனப் பொதுப்படக் கூறினும் சகலர்க்கே உரிய ஆன்ம தத்துவங்களே குறிக்கப்பட்டன. அவற்றின் மேல் உள்ள எட்டிதழ்க் கமலம், இருதய கமலமாம். இதனிடத்திலும், ஆறாதாரங்களிலும் சத்தியும், சிவமும் கலந்து நிற்பினும், தன்னை இவ்விடங்களில் நினைபவர்க்குச் சத்தி இனிது விளங்குவாள் என்றவாறு. பின்னிரண்டடிகளில் பாடம்பெரிதும் திரிபுபட்டுள்ளது.இதனால், சத்தி தியான இடங்களில் விளங்குதல் கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage