
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.
English Meaning:
In Siva-Sakti Union Arose the Five GodsThe Mother and Her Handsome Spouse
Together embracing
Looked inward and out;
The Maya and the Five Sons
With their Saktis arising
Commenced their tasks respective.
Tamil Meaning:
சத்தியும், சிவனும் தம்மிற் கூடிநின்று, தம்மைப் போலவே மங்கையர் ஐவரையும், அவர்கட்கு ஏற்ற காளையர் ஐவரையும் கை கோத்துவிட்டு, அவர்களது கருத்தையும் செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தம்பதியர் தங்களுள் அன்பு செய்து கூடித் தங்கள் தொழிலைக் கடமையாக நன்கு நடாத்தி வருகின்றார்கள்.Special Remark:
சத்தியும், சிவனும் இங்குக் குறிக்கப்பட்ட நிலை, வாகீசு வரியும், வாகீசுவரனுமாய் நிற்கின்ற நிலையாம். கொங்கை நல்லார் ஐவர், `மனோன்மனி, மகேசுவரி, உருத்திராணி, திரு, வாணி` என்பவரும், அவருக்கு ஏற்ற காளையர் ஐவர் முறையே, `சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன்` என்பவரும் ஆவர். இவர் செய்யும் செயல், முறையே, `அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல்` என்பவையாம். இவர்களை இங்குக் குறித்தது, முறையே, `ஆஞ்ஞை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவாதிட்டானம்` என்னும் ஆதாரங்களில் வைத்து. எனவே, சத்தியும், சிவனும் வாகீவரியும், வாகீசுவரனுமாய், நிற்றல், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள தானங்களிலாம். ஆகவே, `சத்தி சிவங்கள் இங்ஙனம் நிற்றலால், யோக நெறி, நின்று பயன் தருகின்றது` என்பது பெறப்பட்டது.``மாரன்`` என்பது `அழகன்` என்னும் அளவினதாய் நின்றது. அங்குலி - கை விரல்கள். கூட்டுதல் - இருவர் கைகளையும் கோத்து விடுதல். `மணம் செய்வித்தனர்` என்றபடி. ``அகம், புறம்`` என்பன ஆகுபெயராய், கருத்தையும் செயலையும், ``பார்த்தனர்`` என்பது அவர்கள் அவ் ஐவருடனும் உடனாய் நிற்றலையும் குறித்தன. `கொங்கை நல்லாள்` என்பது பாடம் அன்று. ``குமாரர்கள்`` என்பது பருவம் குறித்து நின்றது. இலய நிலையின் கீழ்வந்து அதிகார நிலையில் நிற்பவர் என்பது தோன்ற, இவ்வாறு கூறினார். ``சடங்கு`` என்றது, திருமணச் சடங்கையும், தங்கட்கு உரிய கடமைகளையும்.
இதனால், சத்தியும், சிவனும் மேல் ஆதாரத்தினின்று, கீழ் ஆதாரங்களைப் புரந்தருளுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage