
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.
English Meaning:
Omniscience and Omnipresence of SaktiShe is Virgin that oversees directions eight,
She is One that pervades there,
She is beginningless Parasakti that everywhere are;
With fragrant flowers in hand,
And songs in their tongue,
The devotees pray and praise Her
In directions eight.
Tamil Meaning:
எல்லா உலகங்களையும் நினைவு மாத்திரத்தாலே உண்டாக்கி, அவை அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சத்தி, அதற்கு முன்னே அவ்வுலகங்களைக் கடந்து நின்ற ஒரு சத்தியாய் இருப்பாள். அதனால், எட்டுத்திக்கில் உள்ளாரும் தாம் தாம் தமக்கு ஏற்ற பெற்றியால் மணம் பொருந்திய மலர்களைக் கையிலே கொண்டு தோத்திரங்களைச் சொல்லித் தொண்டுபட்டு அம்மலர்களைத் தூவித் தொழுகின்ற தேவி அப்பராசத்தியே யாவாள்.Special Remark:
கு-ரை: `அந்நிலையை அறியாதவர் வேறு வேறு தேவியராகக் கருதிச்செய்யும் வழிபாடுகளையும் ஏற்று அவர்கட்கு ஏற்ற பெற்றியால் அருள் புரிபவளும் அவளன்றி வேறில்லை` என்றபடி,``யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``1
என்னும் சிவஞான சித்தியை நோக்குக. காணல் - கருத்தாற் படைத்தல். `எண்திசையும் கண்டு` எனக் கூட்டுக. ``நிற்கும்`` என்பது இறந்த காலத்தில் நிகழ்காலம். இதன்பின் `அதனால்` என்பதும், இறுதியில் `அவளே` என்பதும் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `தொழநின்ற கன்னி கலந்து வருங் கன்னியாம். அவள், பண்டு பராசத்தியாய் நிற்கும்` என உரைத்தலும் ஆம். இவ்வுரையில் மேற்கூறிய கருத்து உடம்பொடு புணர்த்தலாய் அமையும். மூன்றாம் அடியில் ``தசை`` ஆகுபெயர். ஈற்றடியில், `எண்டிசையிலும்` என்னும் உருபு விரித்துக் கொள்க. இதனால், சத்தி ஆதார ஆதேயமாய் நிற்றலின் பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage