
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
நாலித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.
English Meaning:
Sakti is the Support of AdharasKundalini in the four petalled Muladhara
Into Six and ninety Tattvas blossomed
The Adharas four above have petals forty four in all;
Beyond is the Adhara with sidereal petals
Herself like a tender petal
Supports them all.
Tamil Meaning:
நான்கு இதழ்களையுடைய தாமரையாகிய மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் சுத்ததத்துவம் ஐந்தும், புருடன் ஒன்றும் தவிர, ஏனையதத்துவ தாத்துவிகங்கள் தொண்ணூறும் அடங்கி நிற் கின்றன. இடைநான்கு ஆதாரத்தின் தாமரைகளில் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன. இரண்டிதழ்களையுடைய அந்த ஆஞ்ஞைத் தாமரைக்கு அடியாயுள்ள ஏனைய ஆதாரத் தாமரைகளாய் நின்று அந்த ஆஞ்ஞையைத் தாங்கியும், அவ் ஆஞ்ஞைத் தாமரையாய் நின்று அதன்கண் விளங்கும் தியானப்பொருளைத் தாங்கியும் அருள் புரிகின்றாள் சத்தி.
Special Remark:
ஆறு ஆதாரங்களும், அவற்றின் அமைப்புக்களும், அவற்றில் உள்ளனவும் முன்னைத் தந்திரத்தில் விளங்கக் கூறப் பட்டன. ``இதழ்`` நான்கில் முதலதும், ஈற்றதும் ஆகுபெயர். முத லடியில் ``நாலிதழ்`` என்பதன்பின் `முதலிய` என்பது எஞ்சி நின்றது. சுத்த தத்து வங்கள் ஏழாந் தானத்தில் நிற்றல் பற்றியும், புருடன் ஆஞ் ஞையைக் கடந்தும் செல்லுதல் பற்றியும் அவை ஒழிந்தன ஆறா தாரங்களில் நிற்கும் என்க. ``நாலிதழானவை`` என்பதில் ``நாலின்கண் இதழானவை`` என ஏழன் உருபு விரித்துக்கொள்க. ``அவிர்ந்தது`` என்பது `நவின்றது` என இருந்தது போலும். பால் - பகுப்பு. எனவே, `இரண்டு` என்றதாயிற்று. தரித்தல் - தாங்குதல்; இதற்குச் செயப்படு பொருள் வருவித்துக்கொள்க. உயர்ந்ததாகிய ஆஞ்ஞையின் ஆதார ஆதேயங்களாதல் கூறவே, கீழுள்ளவற்றிற்கும் அவ்வாறாதல் பெறப் பட்டது. மூலாதாரத்திற்கு ஆதார மாதல் நேரேயாம். `சத்தி` என்பது முன்னை அதிகாரத்தினின்றும் வந்து இயைந்தது. ஈற்றடி உயிரெதுகை.இதனால், சத்தி ஆதார பங்கயங்களின் ஆதார ஆதேயமாய் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage