
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தானிகழ் மோகினி சார்வான யோகி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
தானாம் பரசிவம் மேலது தானே.
English Meaning:
Her Blessing Leads to Union in SivaShe is vibrant Mohini,
She is amiable Yogini,
They who reach to Her
Stand at Her Feet adoring,
Unite in Siva that in their life is;
Para Siva, too, they ascend to become.
Tamil Meaning:
சிவசத்தி தனக்கு இடமாகக் கொள்கின்ற குண்டலினி சத்தி, அவளைச் சார்பாகக் கொண்டு விளங்கும் யோகினி சத்தி என்னும் இவர்கள் நீங்கத் தாம் தூயராய் நிற்போரே ஆதி சத்தியைத் தலைப் படுவர். அவரது உணர்வில் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற ஆதி சிவமாம் நிலையை அடைகின்ற பரசிவம் அந்நிலைக்கு மேலுள்ளது.Special Remark:
எனவே, `அந்தப் பரசிவத்தின் சத்தியாகிய பராசத்தியும் மேற்சொல்லிய அனைத்திற்கும் மேல் உள்ளது` என்றவாறு. முதற்கண் ``தான்`` என்றது, முன்னை மந்திரத்திற்கூறிய மனோன்மனியை. குண்டலியும் பந்தமாதல் பற்றி ``மோகினி`` என்றார். யோகினி - யோகத்தைப் பயப்பிக்கின்றவள். அடி, சிவனடி. ஆதி சத்தியை இங் ஙனம் கூறுதல் வழக்கு. `முன்னர்க் கூறப்பட்ட ஆதி சத்திக்கு முதலாகிய சிவம், என்பது தோன்ற, ``அச்சிவம்`` எனச் சுட்டிக் கூறினார். பரசிவ பராசத்திகளின் இயல்பை இவ்வாறு எடுத்துக் கூறியது, அவர்களை அடைதலின் அருமை யுணர்த்தற்கு. ஈற்றில் உள்ள தான், ஏ அசைகள்.இதனால், சத்தி சிவங்களின் உண்மை நிலையின் அருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage