
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
தானான வாறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே.
English Meaning:
Further Evolutes of SaktiFrom Parasakti,
Who thus evoluted,
Arises the Eight Saktis;
And of equal Kalas twice seven;
And Bindu that manifests creation entire;
Indeed Her Divine Mutations are,
She remaining Param as ever.
Tamil Meaning:
சத்திக்குத்தானே அதுவாய் நின்று அருள்செய் கின்ற சிறந்த ஆதாரம், உள்ளே எட்டாயும் வெளியே பதினான்காயும், இடையில், `இரண்டு பத்து` என்னும் சம அளவினவாயும் உள்ள கோணங்களை உடைய சக்கரமாகும். இச்சக்கரம் சொல்லும், பொரு ளும் ஆகிய இருவகை உலகங்களாயும், அவற்றைச் செயற்படுத்து கின்ற கடவுளராயும், அக்கடவுளரது செயல்களாயும் விளங்கும்.Special Remark:
`ஆதலின் அச்சக்கரத்தில் சத்தியை வழிபடுதல் தக்கது` என்பது குறிப்பெச்சம். இங்குக் குறிக்கப்பட்ட சக்கரம் ஷ்ரீசக்கரமாகும். இது மேல்நோக்கிய முனைகளையுடைய முக்கோணம் நான்கு, கீழ் நோக்கிய முனைகளையுடைய முக்கோணம், நான்கு, நடுமுக்கோணம் ஒன்று இவை ஒன்பதும் வேறு வேறாய்த் தோன்றாது ஒன்றினுள் ஒன்று கோத்து நிற்கும் வண்ணம் உபதேச முறையால் வரையப்பட்டு, நடுக் கோணத்தில் விந்துப்புள்ளி இடப்படும். மேலும், பதினான்காய் உள்ள வெளிக் கோணங்களைச் சுற்றி எட்டிதழ்த் தாமரையும், அதனைச் சுற்றி ஒருவட்டமும், அதற்குமேல் பதினாறு இதழ்த்தாமரையும், அதற்கு மேல், மேல் மூன்று வட்டங்களும் வரைந்து, எல்லாம் ஒரு நாற் கோணத்தின்மேல் அமைந்துள்ளதாக வரையப்படும். நாற்கோண மேடையை, `பூ புரம்` என்பர். 1இவற்றுள் மேல் நோக்கிய முனைகளையுடைய முக் கோணங்கள் சிவ கோணங்களும் கீழ்நோக்கிய முனைகளையுடைய முக்கோணங்கள் சத்தி கோணங்களுமாகும். இவற்றுள் நடு முக் கோணம் மேல் நோக்கியிருப்பது, சிருட்டிக்கிரம சக்கரமும், கீழ் நோக்கி யிருப்பது சங்காரக் கிரம சக்கரமும் ஆகும்.
இப்பாட்டில் நாயனார் நடுக்கோணம் ஒழிந்த நாற்பத்திரண் டினைக் குறித்தார். எனவே, `நடுக்கோணத்தையும் கூட்ட இச் சக்கரத்தில் அமையும் முக்கோணம் நாற்பத்து மூன்றாம், என்பது தெளி வாகும். சத்திக்குரிய சக்கரங்கள் அனைத்தும் இதனுள் அடங்கும் என்பதுபற்றி இது `ஷ்ரீசக்கரம்` எனப்படுகின்றது.
இதில் எழுதப்பட வேண்டிய எழுத்துக்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சத்திக்குரிய பொதுச் சக்கரம் ஆதலின், பின்வருமாறு கொள்ளுதல் பொருந்தும்.
பூ புரமாகிய நாற்கோணத்தில் மேற்பக்கம் தொடங்கி வலமாக `ஓம், ஐம், க்லீம், ஸௌ`: என்பனவும், பதினாறு இதழ்களில் ஓம் என்ப தன் கீழ் `ஷ்ரீம்` என்பதும், அதனையடுத்து வலமாக, ககாராதி பஞ்சத சாட்சரங்களும், எட்டிதழ்களில் `ஷ்ரீம்` என்பதன் கீழ்முதல் வலமாக வும், அங்ஙனமே பதினான்கு கோணம், வெளிப்பத்துக் கோணம், உட்பத்துக் கோணம், உள் எட்டுக் கோணம் என்னும் ஐம்பது கோணங் களிலும் ளகாரம் நீக்கி ஏனை அகராதி ஐம்பதெழுத்தும், நடுக்கோணத் தில் பிரணவமும், விந்துவில், `ஹ்ரீம்` என்பதும் எழுதப் படலாம். பிறவகை சொல்லப்படின் ஏற்பது கொள்க. `பஞ்சத சாட்சரங்களில் சிவாட்சரங்களும் உள` எனவும், ஷ்ரீசக்கர கோணங்களில் சில கோணங்களும், விந்துவும் சிவாம்சங்கள் எனவும் கூறப்படுதல் அறிக. இன்னும் பஞ்சதசாட்சர அம்சங்கள் முப்பத்தேழும் முப்பத்தாறு தத்துவமும், தத்துவாதீதப் பொருளும் ஆகும் எனப் படுதலும் காண்க.
இங்ஙனம் இச்சக்கரம் அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்டிருத்தல் பற்றி, ``விந்து, சகம், பரம்`` எனவும், ``பரவாதனை`` எனவும் சொல்லத் தக்கது என்றார். விந்து - வாக்கு; சொற்பிரபஞ்சம். பரவாதனை - கடவுளர்தம் அதிகாரம். ``பரைக்கு`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``தானானவாறும்`` என்னும் உம்மையை, ``சமகலை`` என்பதனோடு கூட்டுக.
இதனால், சத்தி தன்னை வழிபடுவார் பொருட்டுக் கொள்ளும் ஆதார ஆதேயங்கள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage