
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- Prev
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Next
பதிகங்கள்

சூடிடும் அங்குச பாசத்துளை வழி
கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
English Meaning:
Meet Her Through SushumnaIn Her bangled hands beautiful,
She holds elephant-goad and noose,
She carries ascetic pitcher and conch
She seeks letters twain,
That is the heart of Rudra mantra
She dances in rapture, in the Heart
Meet Her through sushumna,
Your breath that way coursing.
Tamil Meaning:
யோக சத்தியை அணுகும் வழி சுழுமுனா நாடி. அவளது இருகைகளில் காணப்படுவன சங்கமும், குண்டிகையும். அவளுக்குரிய சீருத்திர மந்திரம் சிகாரமும், வகர ஆகாரமும் ஆகிய இரண்டெழுத்துக்களால் ஆகிய சொல். அவள் நடனம் புரிகின்ற அரங்கு `புகழை உடைய பொன்மன்று` எனப்படும் புருவநடு.Special Remark:
அங்குசம்போல மேலே வளைந்து நிற்கும் முதுகந் தண்டினைச் சூழ்ந்து செல்லும் கயிறு போன்றுள்ளது பற்றிச், சுழுமுனை நாடியை, ``அங்குச பாசத் துளை`` என்றார். அங்குச பாசங்கள் அம்மைதன் ஆயுதமுமாதல் பற்றி, `சூடிடும்` என்றார். `இரு கோலக் கையில் வளை குண்டிகை` எனக் கூட்டுக. ருத்திரம், சீருத்திரப் பிரச்சினம். அஃது ஆகுபெயராய் அதன்கண் உள்ள மந்திரத்தைக் குறித்தது. `வேத பாகங்களில் சிறந்தது சீருத்திரமே` என்பதைக் குறிக்க, வாளா, `மந்திரம்` என்னாது, `ருத்திரம்` என்றார். `சிவா` என்னும் பதம் சீருத்திரத்துள் பலவிடத்து வருதல் அறிக. எழுத்தை, `பதம்` என்றது, ``வகரக் கிளவி`` 2 என்பது போல ஆகுபெயர். ``ஆடிடும்`` என்பது பாடமன்று, `சீர்` என்பது மிகுத்துக் கூறப்படுதலை உணர்த்திற்று.இதனால், யோகசத்தியை அணுகுதற்குரிய வழி முதலியன கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage