
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.
English Meaning:
Lord is Benevolent Like RainHere He is, there He is, everywhere He is,
In all worlds He is, the Holy Lord,
In darkness He is, Light He is;
In sun He is, in moon He is, everywhere He is;
Benevolent is Lord,
Like the rain that falls.
Tamil Meaning:
உயிர்களுக்குச் சிவனது அறக்கருணை எந்த அள வினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாக வீட்டின்பம் உள தாகும். அவனது மறக்கருணை எந்த அளவினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாகப் பிறவித் துன்பம் உளதாகும். இவையறிந்து, உலகில் எத்தனை வண்ணங்களும், வடிவங்களும் உள்ளனவோ அத்தனை வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குதலைக் கண்டும் மக்கள் அவனைத் துதிக்க மாட்டா தவர்களாய் உள்ளனர்.Special Remark:
முதலடியை இரண்டாம் அடிக்குப் பின்னர்க் கூட்டி யுரைக்க. ``அவ்வண்ணம் ஈசன்`` என்பதில் ``வண்ணம்`` என்று ஆகு பெயராய், `வண்ணத்தன்` எனப்பொருள் தந்தது. வண்ணம் கூறவே, வடிவமும் பெறப்பட்டது. யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்``1 என்பது சித்தாந்தமாகலின் தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் சிவன் வடிவே யாதல் பற்றி, `எல்லா வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குகின்றான் என்றார். `சிவன்` என்னும் வண்ணம் இன்றியே தெய்வங்களை வழிபடினும் அவ்வழிபாடு பின்பு சிவ நெறியிற் சேர்த்தல் பற்றி, ``போற்றகிலாரே`` என்றார். புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும் ... ... சென்றால் சைவத் திறத்தடைவர்`` என்னும் சிவஞான சித்தியால் பிற தெய்வ வழிபாடுகள் சிவநெறி அடைதற்கு வழியாதல் விளங்கும் ``ஈசன்`` என்றதன் சார்பால் ``அறம், மறம்`` என்பன அத்தன்மையவான அவனது கருணை வகைகளைக் குறித்தன. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியும் ஆகும். பவம் - பிறப்பு. அது, ``பாவம்`` என நீட்டப்பெற்றது. `இன்பம், பவம்` என்பன ஒன்றால் ஒன்று விளங்க வைத்தன ஆதலின், பவத்துன்பம், வீட்டின்பம்` என உரைத்துக் கொள்க. ``புறம் பல`` என்பதில் பல, பல தெய்வ வடிவங்கள்.இதனால், `மக்கள் எவ்வளவாயினும் தோத்திரம் செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பரி சாயினும் ஏத்துமின்; ஏத்தினால்,
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே``1
என முன்னருங் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage