
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.
English Meaning:
He is Interminable Light Beyond WordsHe is and He is not; my Lord;
Break your stony heart and there He is;
Ancient is He, Pure is He, Constant is He, Pure Gem is He;
He is Light beyond speech
Interminable is he.
Tamil Meaning:
சிவன், `நாதம்` எனப்படும் சூக்குமை வாக்கினின்றும் தோன்றிய அனைத்து மொழிகளுமாகிய சொற் பிர பஞ்சத்திலும் நீங்காது நிறைந்து நிற்கின்றான். `தேசம், என்று சொல்லப் படும் பூமி ஒன்றுதான் ஆயினும் அஃது ஒன்பது கண்டங்களாகப் பிரிந்து நிற்கின்றது. அப் பிரிவுகளாகிய பொருட் பிரபஞ்சத்திலும் அவன் மலரில் மணம்போல் மருவி நிற்கின்றான். அதனால் அனைத்துலகங்களும், சிவனாகிய முதலையே முதலாகக் கொண்டு இயங்குகின்றன.Special Remark:
`ஆகலான் அவனைத் தோத்திரித்தல் உயிர்கட்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. `சத்தத்தும்` என அத்தும், உம்மையும் விரிக்க. ``இமயம், குமரி இவற்றின் இடைப்பட்ட நிலம், `பாரத வருடம்` என ஒன்றாகவும், அதுதானே குமரி முதலிய ஒன்பது கண்டங்களாகவும் சொல்லப்பட்டது`` என்பதைச் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரத்து, மூன்றாம் அதிகரணப் பகுதியில் காண்க. `அனைத் துலகங்களும்` என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பாரத வருடம் முழுவதையும் கூறினார். ``வாச மரல்போல்`` என்பதை, `மலர் வாசம் போல்` என மாற்றியுரைக்க. ஈசன் - சிவன். `சிவன் என்று` என்றது, `சிவனே முதல் என்று கொண்டு` எனக் கூறியவாறு. இங்ஙனம் கூறியதனால், ``உலப்பிலி`` எனவும், ``மருவி நின்றான்`` எனவும் போந்த பயனிலைகட்கு, `சிவன்` என்பதே எழுவாயாயிற்று.இதனால், சிவன் தோத்திரிக்கப்படும் பொருளாதல் காரணங் கூறி விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage