
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.
English Meaning:
He is Seen in the Mind-MirrorHe appears not in the glasses of the fleshy eye;
He is in the Lotus of the Heart;
He appears in the glass of Vedic Jnana;
He is in the mind-glass of the righteous that think of Him,
Him I saw in the glass of songs
Listening to that Divine Music,
I enraptured stand.
Tamil Meaning:
பூதக் கண் ஆடி - பூத காரியமாகிய `கண்` என்னும் ஆடி. இஃது உருவகம். இது முகத்தில் உள்ள கண்ணைக் குறித்தது. இக் கண்ணிற்கு அகப்படாதவன் சிவன். ஆயினும், போது - அடியார் களுடைய உள்ளக் கமலத்தில் என்றும் விளங்கியே நிற்கின்றான். வேதக் கண்ணாடி - வேதமாகிய கண்ணாடி. இதுவும் உருவகம். பொருள்களைத் தெளிவுற விளக்குதல் பற்றி வேதத்தைக் கண்ணாடியாக உருவகம் செய்தார். இஃது ஆகமத்தையும் உள்ளடக்கியதே. வேதாகமங்களை உணர்வார்க்குச் சிவன் அந்நூல்களின் பொருளாய், உணர்பவர்க்கு வேறாய் நின்று விளங்குகின்றான். இனி, நீதிக்கண் நாடி நினைவார் மனத்து - ``சிவன் - நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்``1 என உணர்ந்து அந்த உணர்வு வடிவாகத் தமது அறிவினுட் காண்பவர் கட்கு அவன் அவர்தம் அறிவுக்கறிவாய், ஒன்றாகியே விளங்கு கின்றான். அத்தகையோனை நான் பலர் பாடும் தோத்திரப் பாடல் -களில் கேட்டுக் கண்ணாடி நிழலைத் தெளிவாக உணர்தல் போல உணர்ந்து நின்றேன். இங்குள்ள கண்ணாடி அதன் நிழலைக் குறித்த ஆகுபெயர். அந்நிழல், தெளிவாக உணரப் படுதற்கு உவமையாயிற்று.Special Remark:
`அதனால், நானும் அவனைத் தோத்திரித்தலையே மேற்கொண்டேன்` என்பது கருத்து. முதல் மூன்று அடிகள் அவன் தோத்திரிக்கப்படுவதற்கு உரியன ஆதலையும் ஈற்றடி தோத்திரங்களில் அவன் இனிது விளங்கி நிற்றலையும் குறிப்பால் உணர்த்தின. இவையே இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டன என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage