
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.
English Meaning:
He Created AllAll worlds by vast oceans girt
He my Lord, filled pervasive;
In ominiscience over-seeing all;
Of yore He created, all, entire,
And stood diffusing His golden hue,
In worlds everywhere.
Tamil Meaning:
அண்டங்கள் அனைத்தையும் கடந்து எல்லையற்று விளங்கும் அகண்டப் பொருளாய் இருப்பினும் பிறவாய் பிறவியாகிய திருமேனிகள் பலவற்றைக் கொண்டு கண்டப் பொருளாயும் விளங்குகின்ற சிவனது, தீயோர் அணுகாத திருவடிகளைக் காணுந் தோறும் அவன் அடியார்கள் சுத்தாவத்தையில் அழுந்துகின்றார்கள்.Special Remark:
`ஆகவே, யாவரும் அவனது திருவடிகளைக் காணுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பெருமை, சிறுமை` என்பன `அகண்டம், கண்டம்` என்னும் பொருளவாய் நின்றன. ``பெருமையன்`` என்பதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. பிண்டம் - தசை. நிணம் முதலிய தாதுக்களின் திரட்சி. எனவே, அது, தாய் தந்தையரது உடற் கூற்றால் தோன்றி வளர்ந்து, பின்னும் உணவால் பெருக்கின்ற புலால் உடம்பைக் குறிக்கும். `அவ்வா றில்லாத பிறவி` என்றது அருட்டிரு மேனியை. சிவனை, ``பிறவா யாக்கைப் பெரியோன்``1 எனப் பிறருங் கூறினார். அஃதாவது, `சிவனுக்கு யாக்கை உண்டு; ஆயினும் அது மேற்கூறியவாறு தாய் தந்தையரால் பிறந்து, அவரால் வளர்க்கப்பட்டது அன்று` என்றதால் ``சிறுமை`` `பிறப்பிப்பதுதான் கடவுட்குப் பெருமை`` எனக் கூறுவாரை நோக்கி, `அத்தகைய பெருமையில்லாத சிறுமையன் எங்கள் சிவன்` என நகை தோன்றக் கூறிய, பழிப்பது போலப் புகழ் புலப் படுத்திய வஞ்சப் புகழ்ச்சியாக உரைப்பாரும் உளர். `சிறுமை யானது` என ஆறாவது விரிக்க. கண்டர் - கண்டகர்; தீயோர். `இவர்கள் கடந்த கழல்` என்றது `அணுகாது விலகிச் சென்ற கழல்` என்றதாம். கனை கழல் அடையடுத்த ஆகுபெயர். `தொண்டர் நடந்த கனைகழல், என்பது பாட மன்று. ``நெறி`` என்றது அவத்தையை. சுத்தாவத்தையின் இயல்பு முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.இதனால், சிவன் அகண்டப் பொருளாயினும் உயிர்களின் பொருட்டுக் கண்டப் பொருளாய்த் தோன்றியருளும் அருட்சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது. `இதுபற்றி அவன் பிறத்தல் இல்லை` என்னும் உண்மையும் உடன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage