
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.
English Meaning:
Seek His FeetSeek His Feet,
They are the Valhalla warriors reach;
Do reach His Feet,
They are the haven of blessed deeds;
Do attain His Feet,
They are the confluence of holy waters;
Thus it is,
For those who constantly adore His Feet.
Tamil Meaning:
``கோழை மிடறாக, கவி கோளும் இலவான``5 நிலைமையை யுடையோரும் முயன்று, ``இசை கூடும் வகையால்``6 சிவனது திருவடிகளை வாழ்த்துபவர்கட்கு அவர்கள், `வீர சுவர்க்க இன்பம் எவ்வாறு உள்ளது` எனக் காண ஒரு கால் விரும்புவாராயின் அத்திருவடிகளே அதுவாய் நின்று அவர்கட்கு அதனைக் காட்டும். அங்கு அவர்கள் செல்ல வேண்டுவதில்லை.இனிப் பொதுவான சுவர்க்க இன்பத்தைக் காண அவர்கள் அவ்வாற்றான் விரும்புவராயின் அதுவாயும் அத்திருவடிகள் நின்று இனிப்பிக்கும்.
தீர்த்தங்கள் பலவற்றில் சென்று மூழ்க அவர்கள் விரும்பு வராயின் அவையாயும் அத்திருவடிகள் அவர்கட்கு நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்யும்.
Special Remark:
`இத்துணை ஆற்றல்களையுடையது சிவனது திருவடிகள்` என்றபடி. இதற்கு எடுத்துக்காட்டாக ஞானசம்பந்தர் திருவீழிமிழலையினின்றும் சீகாழிக்குச்செல்ல நினைத்தபொழுது திருவீழிமிழலைக் கோயிலேக் கோயிலாகிக் காட்சியளித்தமை, திருமருகல் கோயிலும் அவ்வாறே திருச்செங்காட்டங்குடிக் கோயிலாகிக் காட்சியளித்தமை, நாவுக்கரசர்க்குத் திருவையாற்றுக் கோயிலே திருக்கயிலையாகிக் காட்சியளித்தமை முதலியனவாம்.``பொருந்தில்`` என்றதும், `மனம் பொருந்தில்` என்றதேயாம். திருந்துதல் - செந்நெறியிற் செல்லுதல். அதுவும் செல்ல விரும்பு தலையே குறித்தது. ``விரும்பில்`` முதலிய மூன்றும் பெரும்பான்மை விரும்பாமையைக் குறித்து நின்றது. `வருந்தியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அவன் `பண்டறி சுட்டு`.
இதனால், சிவனது திருவடிகளைத் தோத்திரிப்பார்க்கு அவை அவர் வேண்டும் பொருள் அனைத்துமாகிப் பயன் தரும் சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage