
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.
English Meaning:
Practise YogaIn ways diverse, do seek Nandi;
Penetrating the Lotus within and going beyond,
You shall reach the Celestial world,
Having drunk of the nectar there, you shall return;
Sweet, sweet exceeding indeed, it is.
Tamil Meaning:
தேவருலகமும் உங்களை வழிபடுமாறு, நீவிர் உங்கள் உடம்பில் உள்ள ஆதார கமலங்களில் மந்திர ரூபமாய் நுணுகிச் சென்று, அவற்றிற்கு அப்பால் நிராதாரம், அதற்கப்பால் மீதானம் ஆகிய இடங்களை அடைந்து அங்கே நின்றுகொண்டு சிவனைப் பல்லாற்றானும் நினையுங்கள். அவ்வாறு நினைகின்றவர்களில் எவனாயினும் ஒருவன் மீண்டு கீழே வருவானாயின், அவன் மயக்கம் தருகின்ற மதுவை நிரம்ப உண்டு, அதன் கீழ்மையை உணர்ந்து வெறுப்படையும் நிலை உண்டாதலும் கூடும்.Special Remark:
``வானோர் உலகம் வழிபட`` என்பதை இரண்டாம் அடியின் முன்னர்க் கூட்டிப் பின் இரண்டாம் அடியோடு முதலிற் கூட்டி யுரைக்க. நானாவிதம் செய்தல் - பலவகைப்படுத்துதல். அஃதாவது, சிவன், (ஹடயோகம், மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதார யோகம் முதலியவற்றில் நின்று அருளுமாற்றையெல்லாம் நினைத்து துதித்தல். மீளுதல் யோக நிலையினின்றும் நீங்கி உலகமுகப்படுதல். ``தேன்`` என்றது, மதுவை. `தண்ணீர்` என, நகை தோன்றக் கூறுதல்போலக் கூறிய வஞ்சப்புகழ்ச்சி. ``மீண்டவன் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆம்`` என்றது, `உலக மாயையில் வீழ்ந்து அல்லற்பட்டுப் பின் வெறுத்தலும் கூடும்` என்னும் பொருளைத் தோற்றுவித்தலின், பிறிது மொழிகல். `நிராதார மீதானங்களினின்று மீளுதல் கூடாது` என்பதை இங்ஙனம் கூறினார். `மீட்சியைத் தோத்திரம் விலக்கும்` என்பது இங்குள்ள குறிப்பாகக் கொள்க.இதனால் தோத்திரம் மீதானத்தில் சென்றோர்க்கும் உரித்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage