
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.
English Meaning:
He Protects AllThrough successive aeons several,
He stood as Paraparan Supreme;
All worlds He stood protecting
And this world too, as Paraparam Supreme;
This they know not;
He stood pervading the Jivas too,
Immanent in them and transcending them.
Tamil Meaning:
சீவன் ஓவாது வீசுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுதும் நிறைந்து நிற்கின்றான். நின்று, இதன்கண் உளவாகின்ற அனைத்துப் பயன்களையும் தோற்று -விக்கின்றான். இவையல்லாமலும் உயிர்களின் பட்பொறி சென்று பற்றும்படி பொன்னார் மேனியாய் முன் வந்து காட்சியும் தருகின்றான்.Special Remark:
`வேறு என்ன வேண்டும்` என்பது குறிப்பெச்சம். உலவு, உலவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஓங்கு` என்னும் முதனிலை `அம்` என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று, வலித்தல் பெற்று, `ஓக்கம்` என வரும். தேங்கு, தேக்கம்; அடங்கு, அடக்கம்; விளங்கு, விளக்கம் முதலியவற்றைக் காண்க. இஃது இங்கு ஆகு பெயராய், ஓங்கியெழுகின்ற அலைகளைக் குறித்தது. இவ்வாறன்றி, `நோக்கம்` என்னும் பாடத்திற்கு இங்கு இயைபு யாதும் இன்மை அறிக. பலம் - பயன். `முழுதெல்லாம்` என்பது ஒரு பொருட் பன்மொழி. ``முன்னே`` என்பதை, ``நின்றான்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``புலம்`` என்பது பொறியின் மேலதாய், இங்குக் கண்ணைக் குறித்தது. கண் உழுதலாவது, பற்றிக் காணுதல். ``பொன்னிறம்`` என்பது பண்பாகு பெயராய், அதனையுடைய திருமேனியைக் குறித்தது. `சிவன் திருமேனி கொள்ளுங் காலத்தில், பொன்மயமான திருமேனியையே கொள்ள விரும்புகின்றான்` என்பதாம்.இதனால், சிவனது மற்றும் பல அருட் சிறப்பே புகழ்ந்து கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage