
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.
English Meaning:
He is Transcendental and ImmanentBeyond the Kalas Three He stands,
Seek Him;
He is the Lord;
He is the Master of Tattvas,
Priceless is He;
Peerless is He
Beyond Celestials all is He;
Ageless is He;
Yet is He within you,
You but seek Him.
Tamil Meaning:
சிவன், ஏழுலகங்களும் ஒன்றாக ஓர் உருவாய்க் கலந்து, அப்பொழுதே தான் அவற்றுள் ஒன்றும் ஆகாது தனியனாய் நிற்பினும், தனிமையானோர் பலர் பிறர்க்கு எளியராதல்போல எளியனல்லன்; அரியனே, இனி இவன் அளவற்ற உயிர்களோடு அவையேயாய்க் கலந்து அவற்றின் செயல்களில் எல்லாம் தானும் உடன் பயின்று, அனைத்துயிர்கட்கும் ஆத்தனும் ஆகின்றான்.Special Remark:
செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. `தான் என நின்றும் எளிய னல்லன்` என உம்மையை மாற்றிவைத் துரைக்க. நவிலுதல் - பயிலுதல். நம்பன் - நம்பத் தக்கவன். இதுவே வடமொழியில் `ஆத்தன்` எனப்படுகின்றது. இதனுள் சிவன் எல்லாப் பொருளிலும் ஒன்றாய்` வேறாய் உடனாய் நின்று உயிர்கட்கு உறுதுணையாதல் கூறல் பட்டவாறு அறிக. இரு பொருள் ஒன்றாய், வேறாய், உடனாய் இயைந்து நிற்பதொரு சம்பந்த விசேடமே சைவ சித்தாந்தத்துள் கூறப்படும் சுத்தாத்துவிதம் ஆதலை நினைக. சிவன் இவ்வத்துவிதப் பொருளாம் முறைமை இங்குப் புகழ்ந்து கூறப்பட்டது.இம்மந்திரம் பதிப்புக்களில் இரண்டாம் தந்திரத்தில் `அனுக்கிரகம்` என்னும் அதிகாரத்திலும் காண்பபடுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage