
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.
English Meaning:
Lord is in Body LandMounting the Chariot of Mind
They seek the Divine Juggler;
Knowing not whither He went,
They bewail;
Wandering in lands kingdoms far and near,
I saw Him in this fleeting Body-Land
Tamil Meaning:
எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும் காணப்படாது ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, `எப்படியும் கண்டுவிட வேண்டும்` என்று பலர் அவன் ஒளிந்திருக்கும் இடத்தையறியாமல், மனமாகிய நெடுந்தூரம் செல்லத்தக்க தேர்மேல் ஏறிக்கொண்டுச் சென்று வருந்துகின்றார்கள். நானும் அவர்களைப் போலத்தான் எங்கெங்கோ அவனைத் தேடி வருந்தினேன். ஆயினும் நான் `அவன் ஒளிந்திருக்கும் இடம் எனது உடம்பாகிய ஒளியிடந்தான்` என்று தெரிந்து அங்குச் சென்று அவனைக் கண்டு விட்டேன்.Special Remark:
மாயம் - வஞ்சனை; கள்ளத்தனம். அதனையுடையவன் மாயன். சிவன், பல்லாற்றானும் தேடிய பல்லோர்க்கும் அகப்படாத கள்வன் ஆதலை மாணிக்க வாசகர் தமது திருஅண்டப் பகுதியுள் நூற் றிருபத்து நான்கு முதல் நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்தமை காண்க. தேடுவார் தேடும் பொருளாயிமை பற்றி. ``போயின்`` என்றாரேனும், `இருந்த` என்றலே கருத்தென்க. ``நாடு`` மூன்றனுள் நடுவணது ஒன்றே தன் பொருளைத் தந்தது; ஏனை இரண்டும் `இடம்` என்னும் பொருளவாய் நின்றன. `தேயம் பெருநாடும், நாடு உள்நாடும் ஆம்` என்க. `காய நாடு, மின் நாடு` எனத் தனித் தனி முடிக்க. மின் - ஒளி. `ஞானியரது உடம்பு ஊனுடம்பாகாமல் ஒளியுடம்பாம்` என்பது கொள்கை. ஆகவே, `அஞ்ஞானியரது உடம்பன்றி, ஞானியரது உடம்பே சிவன் இருக்கும் இடம்` என்றற்கு, ``மின் என்றும், ``கண்டறி வார் இல்லை காயத்தில் நந்தியை`` என்று முன்னருங் கூறினார்.1இதனால், `இத்தோத்திரம் புறக்காட்சித் தோத்திரம் அன்று; அகக் காட்சித் தோத்திரம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage