
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
English Meaning:
His Cosmic ExistenceHis Crown is aloft pearl-like universes vast,
His Form engrosses seven worlds all,
His Feet descend deep like nether world;
The ignorant know these not,
And delight not.
Tamil Meaning:
தான் படைத்த உலகத்திற்குத் தானே முன்னைப் பழம் பொருளும், பின்னைப் புதுப் பொருளுமாய்,1 நிற்கும் சிவன், தான் தன் மேல்நிலையினின்றும் இறங்கி வந்து உலகத்தைப் படைக்கின்ற முறை அதுவாகும் (அஃதாவது, `உலகத்திற்கு அது தோன்றும் இடமும், பின் ஒடுங்கும் இடமும் தானேயன்றிப் பிறரில்லாத தனியொரு முதல்வன்` என்பதாம்.) அவன் உலகத்திற்கு வித்தாகிய மாயையின் வியாபகத்தைக் கடந்து அப்பால் உள்ளவ -னாயினும் அசுத்த உலகமாகிய இந்தப் பிரகிருதி புவனத்தில் உள்ளவர்கட்கும் அவனே முதல்வன்.Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `பரம், உபரம்` என்பன, `முன், பின்` என்னும் பொருளைத் தந்தன. `கடலினின்றும் தோன்றும் அலை, நுரை, திவலை முதலியவற்றிற்குக் கடலே முன்னைப் பொருளும், பின்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளும் தானேயாய் இருக்கின்றான்` என்பதை,``நுரையும் திரையும், நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடற்
பெருத்தும், சிறுத்தும் பிறங்கு தோன்றி
எண்ணில வாகி யிருங்கட லடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும்; நீ
ஒன்றினும் தோன்றாய்; ஒன்றினும் அடங்காய்``2
என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கால் உணர்க. உபநிடதமும், ``எல்லாம் பிரமத்தினின்றும் தோன்றி அதிலே அடங்குகின்றன. இடையிலும் அதிலேதான் நிலைத்திருக்கின்றன``1 எனக் கூறிற்று.
சிவன் தான் படைத்த உலகத்திற்கு வெளியிலே வியாபித்த லன்றியும் எல்லாப் பொருள்களினுள்ளும் எள்ளினுள் எண்ணெய் போல நிறைந்தும் நிற்றலால், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்`` என்றார். பெந்தம் - பெத்தம். என்றது இங்கு, முக்குண வடிவாய் அறிவை மாறி மாறி மயக்குகின்ற மூலப் பிரகிருதியை. `இதன் காரிய புவனங்களில் வாழ்பவர் மூவகை ஆன்மாக்களுள் கீழ்ப் பட்ட சகலர்` என்பதை ``கீழோர்`` என்பதனால் குறித்தார். `கீழோர்க்கும்` எனத் தொகுக்கப்பட்ட உருபையும், உம்மையையும் விரிக்க. `அதிகார மூர்த்திகள் பலரும் சிவனது ஏவல் வழி நிற்பவரே யன்றிச் சுதந்திரர் அல்லர்` என்பது முன் மந்திரத்தில் இனிது விளக்கப்பட்டமையால் ஈண்டுள்ளார்க்கும் சிவனே முதல்வன் ஆதற்கு இழுக்கின்மை அறிக.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage