
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.
English Meaning:
He is Endless BlissHe appears not in heavenly space,
Yet Form He has;
He is not visible to naked eye,
Yet is He visible to inner eye;
He is the fruit of music;
He is the goodly One;
He is the fruit of all good deeds;
Endless Bliss is He,
He our Lord.
Tamil Meaning:
எப்பொழுதும் பகையாய் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவராகிய தேவரும், அசுரரும் தாம் தாம் தனித் தனியே வந்து நாள்தோறும் சிவபெருமானைத் துதித்து அவன் திருவடியை நினைப்பர். துதிப்பவர்க்கு அருளும் முறையில் அவர் வேண்டிய வற்றை அவர்க்கு அவன் அளித்து நிற்பான். (அவற்றால் விளையும் விளைவுகட்கு அவன் பொறுப்பாதல் இல்லை. மனிதருள்ளும் இத்தகையோர் உளர். அவர்களிடத்தும் சிவபெருமான் அத்தகையோ -னாகியே நிற்பன். ஆயினும், உள்ளத்தில் அன்பு மிகத் துதிக்கின்ற வர்களுக்கு அவன் அகமாகிய உயிரைப் பற்றியும், புறமாகிய பொருள், சுற்றம் பற்றியும் அவர் வேண்டுவனவற்றை வேண்டிய வாறே தாராது, ஆவனவற்றைத் தந்து, ஆகாதனவற்றை விலக்கி, அவர்களது அறிவையும் திருத்துவான்.Special Remark:
இதனை அப்பர் பெருமான் கயிலையை அடைய முயன்று அணுகியும் அடையச் செய்யாது மீள்வித்தமையும், வாதவூரடிகள் ஏனையடியார் போலத் தம்மையும் உடனழைத்துச் செல்ல வேண்டியும் அழையாது இருத்தினமையும் போல்வனவற்றால் உணரலாம்.``வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாம்தொழ வேண்டி``1
என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. ``மாறாய் எதிர்`` என ஆக்கம் வருவிக்க. `உள்ளத் ஊறுவார்` என மாற்றியுரைக்க. `அகம், புறம்` என்பன முதற்கண் அவ்விடத்துப் பொருள்களைக் குறித்துப் பின் அவை பற்றிய பற்றுக்களைக் குறித்தன. `அப்பற்றுக்களில் அவர் வேண்டியவாறன்றி வேறு செய்தும்` என்க. `செய்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `விளக்கொளியாதல் அறிவிற்கு` என்க. ஊறுவார் உள்ளத்திற்கு அருளும் முறை கூறியதனால், அவரின் வேறானவர்க்கு அருளும் முறை பெறப்பட்டது.
இதனால், சிவன் தன் அடியார்க்குச் சிறந்த வகையில் அருள்புரிதல் புகழ்ந்து கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage