
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.
English Meaning:
Glorious Reward of PrayerWho were they,
Like mountain on kingly elephant sat,
And to sweet music accompanying, in procession we
Of yore, they chanted the Primal Lord`s name in fervour
And so attained the status exalted.
Tamil Meaning:
நிலைபெற்ற மலைபோலும் தோற்றத்தை உடையதாய், ஆயினும் மதத்தால் அடங்காது நடக்கும் யானையின் மேல் பலர் இனிய இசைபாடிச் சூழ்ந்து வர இப்பொழுது உலாவரும் அரசர்கள் யாவரெனின், `முற்பிறப்பில் சிவனது ஆயிரம் நாமங்களை எடுத்தோதித் திரித்தவர்` என்றே அவரது பெருமையின் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.Special Remark:
முன் இயல் காலம் - முற்பிறப்பு. ``என்றே`` என்னும் கோரம் தேற்றம்.``வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,
நந்தாவனஞ் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும்,
சிதவல் சுற்றிக்
கால்நகம் தேயத்திரிந் நிரப்பாரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற்கு அடியரும், அல்லாப்
படிறருமே``
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண்ணாள்வீர்,
பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனொடு
ஒன்றலுற்றீர்,
நலகா மலரால் அருச்சிமின்; நாள்
நரகத்து நிற்கு
அலகா முறுவீர் அரனடி யாரை
அலைமின்களே``1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
``மத வாரணம்`` என்றது, ஐராவதத்தையும் குறிக்கும் குறிப்பினது.
``வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் (இந்திரன்) இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்``2
``வானம் ஏத்த யான் (மாயோன்) வைகுந்த வாழ்வுபெற்றதுவும்,
ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும்,
ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கை எய்தியதும்
ஆனுயர்த்தவர் அருட்குறி அருச்சனைப் பயனால்``3
எனக் காஞ்சிப் புராணத்திலும் சொல்லப்பட்டன. நல்வாழ்வு வாழ் வோரைக் கண்டால், ``அஃது அவர் பூசா பலம்`` என்றல் இன்றும் வழக்கில் உள்ளது. ``பாடறிவீரே என்றது, பன்னுவீராயின் நீவிரும் பெருவாழ்வு வாழலாம்` என்றபடி.
இதனால், தோத்திரத்தின் பயன் உணர்த்தும் முகத்தால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage