ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
    தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
    பன்னிரண் டாதியோ டந்தப் பதினாலும்
    சொன்னிலை சோடசம் அந்தம்என் றோதிடே.
  • 10. பூரித்த பூவிதழ் எட்டினுக் குள்ளேஓர்
    ஆரியத் தாள்உளள் அங்கெண்மர் கன்னியர்
    பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
    சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.
  • 11. கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
    எண்டிசை யோகி இறைவி பராசத்தி
    அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
    புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
  • 12. பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
    யோசனை பஞ்சத் தொலி வந் துரைசெய்யும்
    வாச மிலாத மணிமந் திரயோகம்
    தேசந் திகழும் திரிபுரை காணே.
  • 13. காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
    பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
    பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
    காணுந் தலைவிநற் காரணி காணே.
  • 14. காரண மந்திரம் ஓதும் கமலத்துப்
    பூரண கும்ப இரேசம் பொருந்திய
    நாரணி நந்தி நடு அங் குரைசெய்த
    ஆரண வேதநூல் அந்தமு மாமே.
  • 15. அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
    வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
    செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
    நந்தி இதனை நவம்உரைத் தானே.
  • 16. உரைத்த நவசக்தி ஒன்று முடிய
    நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
    பிரச்சதம் எட்டும்முன் பேசிய நந்தி
    நிரைத்து நியதி நியமம்செய் தானே.
  • 17. தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
    ஏமத் திருளற வீசும் இளங்கொடி
    ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
    மேவித் தமுதொடு மீண்டது காணே.
  • 18. காணும் இருதய மந்திரமும் கண்டு
    பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
    வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
    பூணும் நடுவென்ற வஞ்சஞ் சிகையே.
  • 19. சிகைநின்ற அந்தம் கவசம்கொண் டாதி
    பகைநின்ற அங்கத்தைப் பட்டென்று மாறித்
    தொகைநின்ற நேத்திரம் முத்திரை சூலம்
    வகைநின்ற யோனி வருத்தலும் ஆமே.
  • 2. அந்தம் பதினா லதுவே வயிரவி
    முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
    சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
    அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
  • 20. வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
    பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
    நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
    பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
  • 21. பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
    கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
    வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
    கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.
  • 22. கூவிய சீவன் பிராணன் முதலாகப்
    பாவிய சவ்வுடன் பண்ணும் மகாரத்தை
    மேவிய மாயை விரிசங்கு முத்திரை
    தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.
  • 23. நின்ற வயிரவி நீலி நிசாசரி
    ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
    சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
    நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
  • 24. சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
    நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
    தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
    ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
  • 25. ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
    ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
    பேதை உலகில் பிறவிகள் நாசமாம்
    ஓத உலவாத கோலம்ஒன் றாகுமே.
  • 26. கோலக் குழலி குலாய புருவத்தள்
    நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
    ஆலிக்கும் இன்னமு தானந்த சுந்தரி
    மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.
  • 27. வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
    தெளிப்படு வித்தென்றன் சிந்தையி னுள்ளே
    களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
    ஒளிப்படுவித்தென்னை உய்யக்கொண் டாளே.
  • 28. கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
    கண்டனள் எண்ணெண் கலையின்கண் மாலைகள்
    விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
    தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
  • 29. தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
    மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப்
    பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
    வெய்ய பவம்இனி மேவகி லாவே.
  • 3. ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
    போகின்ற பூதம் பொருந்து புராதரர்
    சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
    போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.
  • 30. வேயன தோளி விரையுறு மென்மலர்
    ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
    தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
    ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.
  • 31. இனியதென் மூலை இருக்குங் குமரி
    தனியொரு நாயகி தானே தலைவி
    தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
    நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.
  • 32. நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
    கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
    பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
    ஊடகம் மேவி உறங்குகின் றேனே.
  • 33. உறங்கு மளவில் மனோன்மனி வந்து
    கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
    பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்
    டுறங்கல்ஐ யாஎன் றுபாயஞ்செய் தாளே.
  • 34. உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
    தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
    சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
    அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.
  • 35. அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
    செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
    தஞ்சம்என் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
    கின்சொல் லளிக்கும் இறைவிஎன் றாரே.
  • 36. ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
    காரியல் கோதையள் காரணி நாரணி
    ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
    கோரிஎன் உள்ளங் குலாவிநின் றாளே.
  • 37. குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
    நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
    உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
    கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
  • 38. கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
    முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
    சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
    அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.
  • 39. இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
    பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
    திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
    அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
  • 4. புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
    எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
    பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
    திண்ணிய சிந்தையன் தென்னனு மாமே.
  • 40. ஆதி அனாதி அகாரணி காரணி
    சோதி அசோதி சுகபர சுந்தரி
    மாது சாமாதி மனோன்மனி மங்கலி
    ஓதிஎன் உள்ளத் துடன்இயைந் தாளே.
  • 41. இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
    நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
    பயன்தனை ஓரும் பதமது பற்றும்
    பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.
  • 42. பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
    முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
    கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
    முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.
  • 43. உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள்
    பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
    வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக்
    கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.
  • 44. கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
    துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
    பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
    என்னேஇம் மாயை இருளது தானே.
  • 45. இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
    பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
    தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
    அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.
  • 46. ஆதி அனாதியும் ஆய பராசத்தி
    பாதி பராபரை மேலுறை பைந்தொடி
    மாது சமாதி மனோன்மனி மங்கலி
    ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.
  • 47. ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
    ஆதிஇல் வேதமே யாம்என் றறிகிலர்
    சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள்
    ஆதிஎன் றோதினள் ஆவின் கிழத்தியே.
  • 48. ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்டுறை
    நாவின் கிழத்தி நலம்புகழ்ந் தேத்திடும்
    தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
    மேவுங் கிழத்தி வினைகடிந் தாளே.
  • 49. வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
    தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
    எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
    கணவனைக் காண அனாதியு மாமே.
  • 5. தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
    பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
    பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
    டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
  • 50. ஆதி அனாதி அகாரணி காரணி
    வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
    சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
    பாதி பராபரை பன்னிரண் டாதியே.
  • 6. ஓதிய நந்தி உணருந் திருவருள்
    நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
    போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
    சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
  • 7. சூலம் கபாலம்கை யேந்திய சூலிக்கு
    நாலங் கரம்உள நாகபா சாங்குசம்
    மாலங் கயன்அறி யாத வடிவற்கு
    மேலங்க மாய்நின்ற மெல்லிய லாளே.
  • 8. மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
    சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
    கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
    பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
  • 9. பன்மணி சந்திர கோடி திருமுடி
    சொன்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
    நன்மணி சூரிய சோம நயனத்தள்
    பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.