
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

கலைத்தலை நெற்றிஓர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி யிருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் ஆங்கிருந் தாளே.
English Meaning:
She Sought Siva in Mount Meru WithinHe who wears the crescent moon on His head,
He who has the Third Eye in His Forehead,
In Him, She, the full-breasted Mother
In union abides,
Looking toward Him,
Who at the crest of Mount Meru within is;
The Flowery vine, too, there stood.
Tamil Meaning:
மேற் கூறிய அச்சத்தி, உன்மனாகலையின் இடமாகிய அந்தத் துவாதசாந்தத்தில் தான் தனியே இராது சிவத்தோடு கூடியே விளங்குவாள். அவ்வாறு விளங்குதல், பிராசாத யோகிகட்கு அவ்யோகத்தால் புருவ நடுவில் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்ற உணர்வைக் கண்டுகொண்டேயாம்.Special Remark:
``முலைத்தலை மங்கை`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `முலையையுடைய தலை மங்கை` என்க. `முலையை உடைய` என்னும் விதப்பு. அபர ஞான பரஞானங்களைத் தருபவ ளாதலைக் குறித்து நின்றது. தலை மங்கை - தலைவி. `அக்கலைத் தலைக்கண்` எனச் சுட்டு வருவித்தும், உருபு விரித்தும் ``இருக்கும்`` என்பதனோடு முடிக்க. ``கலைத் தலை, சிலைத் தலை`` என்பவற்றில் தலை, இடம். ``கண்`` இரண்டனுள், பின்னது, `உயிர்கட்குக் கண் போலச் சிறந்தவன்` எனப் பொருள் தந்து, சிவபிரானைக் குறித்தது. ``உள் முயங்கி`` என்றது. `இரண்டறக் கலந்து` என்றவாறு. `முயங்கியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. சிலை - வில். அஃது உவமையாகுபெயராய்ப் புருவத்தை உணர்த்திற்று. தெரிவு - அறிவு. அலைதல் - அசைதல். `அலைந்த` என்பது வலிந்துநின்றது கொம்பினள் - கொம்புபோல்பவள். `அலைத்த பூங்கொம்பினள்` என்பது, சுட்டுப் பெயரளவாய் நின்றது.இதனால், சத்தி துவாதசாந்தத்தில் விளங்கும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage