
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திரு நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.
English Meaning:
She United in Siva in Cranium CavityShe dwells, the Mother Sweet, in my heart
She then entered the four-finger prana* of breath retained
And She joined Siva in union divine
And performed penance rare,
She, the Ancient One.
Tamil Meaning:
என் இருதயத்தில் இருப்பவளாகிய அந்தச் சத்தி, மேற்கூறியவாறு சிவனுடன் துவாதசாந்தத்தில் விளங்குதல், பிராசாத யோகத்தைப் பற்றி இருதயத்தினின்றும் எழுந்து கண்டத் தானத்தை அடைந்து, அதன்பின்னர் அங்கு நின்றும் துவாதசாந்தத்தில் சென்றே யாம். அந்நிலையும் பழமையானதேயன்றிப் புதியதன்று.Special Remark:
`என்னுள்ளம் மேவி இருந்தனளாகிய ஏந்திழை, பொருந்து இருநால் விரல் கடந்து புக்கனளாய்ப் புல்லியபின், தாணுவில் சேர்ந்து உடன்ஒன்றி, ஆதியின் நாளே அருந்தவம் எய்தினள்` என முடிவு செய்க. தவம் எய்துதல், ஞானத்தைக் கொடுத்தலில் குறிக்கோளாய் இருத்தல். `அந்நிலை யோகத்தால் புலனாவதன்றிப் புதிதாக உளதாவதன்று` என்பார், ``ஆதியின் நாளே` என்றார். இவ்விடத்து இன், வேண்டாவழிச் சாரியை.இதனால், மேற்கூறிய நிலை பிராசாத யோகத்தானே அறியற் பாலதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage